தமிழகம் முழுவதும் சாலைகள் பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படும் நிலையில், தற்போது சாலை வரியை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டிருப்பது எந்த வகையில் நியாயம்? என்று கேப்டன் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் ஒரு லட்சம் ரூபாய் வரையிலான வாகனங்களுக்கு 10% வரியும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள வாகனங்களுக்கு 12% வரியும் அதிகரிக்கப்பட இருப்பதாக தகவல் வழியாக உள்ளன.
இந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் தன் டுவிட்டர் பக்கத்தில் பல்வேறு வரிகளால் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு முடக்கிய திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழ்நாட்டில் எங்கும் ஒழுங்கான சாலை வசதி இல்லாத நிலையில், சாலை வரியை உயர்த்துவதா?
மேலும், சாலை வரியை 5 சதவீதம் வரை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகம் முழுவதும் சாலைகள் பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படும் நிலையில், தற்போது சாலை வரியை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டிருப்பது எந்த வகையில் நியாயம்? சாலை வரியை உயர்த்தும் முடிவை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.