தன்னைக் கைது செய்வதாக வெளியாகும் செய்திக்கு பதிலளித்த பாபா ராம்தேவ், அவர்களால் அப்பாவால் கூட என்னைக் கைது செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.
அலோபதி மருத்துவம் குறித்து தவறாகப் பேசியதற்காக மன்னிப்புக் கேட்கவில்லை என்றால் ரூ.1000 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப்படும் என ஐஎம்ஏ என மருத்துவர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
சர்ச்சைக்குப் பெயர் போனவர் பாபா ராம்தேவ். இவர் அமீபத்தில் அலோபதி மருத்துவம் குறித்து ஒரு இழிவுப்படுத்தும் விதமாகப் பேசினார். இதுகுறித்து அறிந்த IMA ராம்தேவ் தனது முந்தைய விமர்சனத்தை திருத்தி புதிய வீடியோ ஒன்றை சமூக ஊடங்களில் வெளியிடவேண்டும். அதேபோல் அலோபதி மருத்துவம் குறித்து தவறாகப் பேசியதற்காக மன்னிப்புக் கேட்கவில்லை என்றால் ரூ.1000 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப்படும் என ஐஎம்ஏ என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில், டெல்லி காவல்நிலையத்தில் பாபா ராம்தேவ் மீது ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சச்சரவு ஒயும் முன்பாகவே ராம்தேவ் பேசும் மற்றோரு வீடியோ சர்ச்சை உருவாகியுள்ளது.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: என்னைக்கைது செய்வதாக எல்லோரும் சப்தம் போடுகிறார்கள்…. ஆனால் அவர்களின் அப்பா கூட என்னைக் கைது செய்ய முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
இதனால் பாபா ராம்தேவுக்கு எதிராக நெட்டிசன்கள் கிராப்டர் ராம்தேவ், மகாதக் ராம்தேவ் போன்ற டிரெண்டுகளை உருவாக்கி வருகிறது.