தடுப்பூசி சான்றிதழை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்யக்கூடாது: மத்திய அரசு எச்சரிக்கை!

வியாழன், 27 மே 2021 (16:21 IST)
தடுப்பூசி சான்றிதழை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்யக்கூடாது: மத்திய அரசு எச்சரிக்கை!
தடுப்பூசி போட்டுக் கொள்ளும் போது வழங்கப்படும் சான்றிதழில் சமூக வலைதளங்களில் ஷேர் செய்ய கூடாது என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது
 
தடுப்பூசி முதல் டோஸ் போடும்போது ஒரு சான்றிதழ் வழங்கப்படும். அந்த சான்றிதழில் தடுப்பூசி போட்டவரின் பெயர் முகவரி மற்றும் விபரங்கள், தடுப்பூசி போட்டுக் கொண்ட நாள், நேரம் மற்றும் இரண்டாவது டோஸ் போட வேண்டிய நாள் உள்ளிட்ட பல விவரங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்
 
ஒரு சிலர் ஆர்வக் கோளாறு காரணமாக தடுப்பூசி சான்றிதழை சமூக வலைதளங்களில் பதிவு செய்வதால் அவர்களுடைய தனிப்பட்ட விவரங்கள் பொதுவெளிக்கு வரும் என்பதால் அதனால் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே தடுப்பூசி போட்டவர்கள் சான்றிதழை சமூக வலைதளங்களில் ஷேர் செய்ய வேண்டாம் என மத்திய அரசு எச்சரித்துள்ளது
 
மேலும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழை அனைவரும் பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்றும் எதிர்காலத்தில் வெளிமாநிலம் அல்லது வெளிநாடு செல்வதற்கு அந்த சான்றிதழ் தேவைப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்