தடுப்பூசி போடாவிட்டால் சம்பளம் இல்லை: அதிரடி உத்தரவு பிறப்பித்த அதிகாரி!

வியாழன், 27 மே 2021 (15:40 IST)
தடுப்பூசி போடாவிட்டால் அடுத்த மாதம் சம்பளம் இல்லை என உயர் அதிகாரி ஒருவர் தனக்கு கீழ் பணிபுரியும் பணியாளர்களை எச்சரித்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பழங்குடி நலத்துறை அதிகாரி ஒருவர் தனக்கு கீழ் பணிபுரியும் பணியாளர்களிடம் கொரனோ தடுப்பூசி போடுமாறு உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை அடுத்து பல ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் ஆனால் ஒரு சில ஊழியர்கள் தடுப்பூசி போடாமல் மெத்தனமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் இன்று அவர் பிறப்பித்த உத்தரவில் தடுப்பூசி போடாதவர்களுக்கு சம்பளம் இல்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பணியாளர்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொண்டு வந்துள்ளதாகவும் அவருக்கு கீழ் பணிபுரியும் 100 சதவீத ஊழியர்கள் தற்போது தடுப்பூசி போட்டு விட்டதாகவும் தெரிகிறது 
 
இது போன்ற அதிரடி உத்தரவு பிறப்பித்தால் மட்டுமே தடுப்பூசி 100% போடப்படும் என்பதால் மற்ற அதிகாரிகளும் இதே முறையை கடைபிடிக்கலாம் என்று கூறப்பட்டு வருகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்