கும்பமேளா காலத்தில் நான்கு கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் வரும் என்றும், இந்த நிகழ்வுதான் "கும்பம் மகா கும்பமேளா" என்றும் அழைக்கப்படுகிறது. இன்று முதல் பிப்ரவரி 26ஆம் தேதி வரை, 45 நாட்கள் நடைபெறும் இந்த கும்பமேளாவில் 45 கோடிக்கு அதிகமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்றும், கங்கை நதியில் புனித நீராடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
வழக்கமாக பிரயாக்ராஜ், ஹரித்வார், உஜ்ஜயினி மற்றும் நாசிக் ஆகிய நான்கு புனித இடங்களில் கும்பமேளா நடைபெறும் நிலையில், இந்த ஆண்டு உத்தர பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரயாக்ராஜ் என அழைக்கப்படும் திரிவேணி சங்கமத்தில் நீராட ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்றும், இங்கு நீராடுவதால் இந்த பிறவியின் பாவங்கள் நீங்கி மோட்சம் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது. இதனை அடுத்து கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.