இளம்பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிய என்ஜினியருக்கு செருப்பு அடி - வீடியோ

Webdunia
வியாழன், 28 ஜூலை 2016 (10:40 IST)
திருமணம் செய்வதாக வாக்களித்து இளம்பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய நபருக்கு செருப்படி விழிந்தது.


 


மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் என்ஜினியராக வேலை செய்பவர் ஸ்ரீகாந்த் லோந்தே. அவர் அதே நிறுவனத்தில் வேலை செய்யும் இளம்பெண்ணிடம் அவரை திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்துள்ளார். இதையடுத்து ஸ்ரீகாந்த் அந்த பெண்ணுடன் உறவு கொண்டதில் அவர் கர்ப்பமானார்.

தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த பெண் கேட்டதற்கு ஸ்ரீகாந்த் மறுத்தார். இதைத் தொடர்ந்து அந்த பெண் மும்பையை சேர்ந்த புமதா பிரிகேட் அமைப்பின் தலைவர் திருப்தி தேசாயை அணுகி நடந்த சம்பவத்தை தெரிவித்தார். திருப்தி தேசாய், பெண்கள் உரிமைக்காக பல போராட்டங்கள் நடத்தியவர். இந்த சம்பவத்தை கேட்ட அவர், ஸ்ரீகாந்தை நடுத்தெருவில் வைத்து தனது செறுப்பால் அடித்து பாடம் புகட்டினார்.
அடுத்த கட்டுரையில்