எம்பி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.. அடுத்த குறியா?

திங்கள், 26 ஜூன் 2023 (09:01 IST)
அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் அரசியல் பிரபலங்களின் வீடுகளில் சோதனை செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். 
 
குறிப்பாக தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை செய்தனர் என்பதும் அவரை கைது செய்தனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் அடுத்த கட்டமாக லட்சத்தீவு எம்பி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
லட்சத்தீவு எம்பி முகமது பைசல் என்பவர் அலுவலகம் மற்றும் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாகவும் தகவல் வழியாகியுள்ளன. லட்சத்தீவு மட்டுமின்றி இவருக்கு சொந்தமான கொச்சி மற்றும் டெல்லியில் உள்ள வீடுகளிலும் ஒரே நேரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
 
லட்சத்தீவில் இருந்து இலங்கைக்கு மீன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்து உள்ள நிலையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. சோதனைக்கு முன்பே பணமோசடி குற்றச்சாட்டில் முகமது பைசல் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்