செந்தில் பாலாஜியை கைது செய்த நோக்கம் பயனற்றதாகிவிட்டது: அமலாக்கத்துறை

செவ்வாய், 20 ஜூன் 2023 (15:44 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ததற்கான நோக்கமும் விசாரணை செய்யப்படுவதற்கான நோக்கமும் பயனற்றதாக ஆகிவிட்டது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு குறித்து அமலாக்கத்துறை மேல்முறையீட்டு மனுவில் தெரிவித்துள்ளது. 
 
உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீடு செய்தது. இந்த நிலையில் அமலாக்கத் துறையின் மேல்முறையீட்டு மனுவில் ’கைது செய்யப்பட்ட உடனே அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நலம் குன்றியதாக நடித்து மருத்துவமனையில் சேர்ந்து உள்ளார் இதனால் அவரை கைது செய்ததற்கான நோக்கமும் விசாரணையும் பயனற்றதாகிவிட்டது. 
 
மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க சென்னை முதன்மை நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகள் விசாரணைக்கு எந்த விதத்திலும் உதவாது என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தனியார் மருத்துவமனையில் சேர்ந்து விட்டதால் அவரிடம் விசாரணை நடத்த அமலாகத் துறைக்கு உரிய உத்தரவுகள் இருந்தும் பயனில்லாமல் உள்ளது என்றும் மேல்முறையீட்டு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்