2014-15 நடந்த குற்றங்களுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டது, திமுக ஆட்சிக்கு வந்த பின் அமலாக்கப் பிரிவு இந்த வழக்கை பதிவு செய்துள்ளது. அதன் பிறகே செந்தில் பாலாஜிக்கு அமலாக்கப்பிரிவு 5 முறை சம்மன் அனுப்பியுள்ளது
கடந்த ஜூன் 14ல், செந்தில்பாலாஜியை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதே அமலாக்கப்பிரிவு தான். அவருக்கு போலியான அறுவை சிகிச்சை என எப்படி கூற முடியும்? அறுவை சிகிச்சைக்கு பின் அவரை விசாரிப்பது முறையல்ல என்ற அமலாக்கப் பிரிவின் முடிவுக்கு நன்றி என்று வாதாடினார்.