செந்தில் பாலாஜி மனைவி புகார்: அமலாக்கத்துறைக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

செவ்வாய், 20 ஜூன் 2023 (17:30 IST)
அமலாக்கத்துறை இணை இயக்குனருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
 
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த கைது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
 
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த மனித உரிமை ஆணையம் தற்போது இது குறித்து விளக்கம் அளிக்க அமலாக்கத்துறை இணை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
 
இந்த நோட்டீசை எந்த அளவுக்கு அமலாக்கத்துறை சீரியஸ் ஆக எடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்