ஹலோ டாக்டர்.. எங்க இருக்கீங்க..! – ராணுவ மருத்துவமனையில் உலா வந்த யானைகள்!

Webdunia
செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (15:42 IST)
மேற்கு வங்கத்தில் உள்ள ராணுவ மருத்துவமனை ஒன்றிற்குள் யானைகள் புகுந்து வலம் வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

நகரமயமாக்கல், காடுகளை அழித்தல் போன்றவற்றால் யானைகளின் வழித்தரம் ஆக்கிரமிப்பு ஏற்பட்டு யானைகள் – மனிதர்கள் இடையே மோதல்கள் அதிகரிக்கின்றன. பல பகுதிகளில் யானைகள் காட்டைவிட்டு வெளியேறுவதும் தொடர்கிறது.

இதனால் பல பகுதிகளில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகள், நகரங்களுக்குள் யானைகள் புகுந்து விடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தற்போது அதேபோல மேற்கு வங்கத்திலும் அப்படியான ஒரு சம்பவம் நடந்துள்ளது. மேற்கு வங்காளத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் தங்கும் குடியிருப்பு பகுதிக்கு அருகே ஒருங்கிணைந்த மருத்துவமனை அமைந்துள்ளது.

இரவு நேரத்தில் திடீரென இந்த மருத்துவமனைக்குள் யானை ஒன்று நுழைந்துள்ளது. மருத்துவ வார்டுக்குள் நுழைந்த யானையை பின்தொடர்ந்து மேலும் சில யானைகளும் உள்ளே நுழைந்தன. குறுகிய பாதைக்குள் உடலை நுழைத்து யானைகள் சென்றதை அங்கிருந்த சிலர் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்