அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையா?

செவ்வாய், 29 மார்ச் 2022 (12:20 IST)
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை ஏற்பட்ட நில அதிர்வு 4.4 ரிக்டர் அளவில் உருவாகியுள்ளதாகவும் இந்த நிலநடுக்கம் வடக்கு அந்தமான் திட்லிபூர் என்ற பகுதியில் இருந்து வடக்கே 147 கிலோ மீட்டர் தொலைவில் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
அதிகாலை 2 மணி அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவிஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்