அந்தமானில் உள்ளாட்சி தேர்தல்: பிரச்சாரத்திற்கு சென்ற அண்ணாமலை!
சனி, 26 பிப்ரவரி 2022 (16:44 IST)
அந்தமானில் மார்ச் 6ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து அங்கு உள்ள பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அந்தமான் சென்றுள்ளார்.
அந்தமானில் மார்ச் 6ஆம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் திமுக அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்
இந்த நிலையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய அண்ணாமலைஅந்தமான் சென்றுள்ளார். அவர் இன்று முதல் பிரச்சார தேதி முடியும் வரை அங்கு பிரச்சாரம் செய்வார் என்று பாஜக தேசிய தலைமை கூறியுள்ளது.