அக்டோபர் 10 அன்று ஒடிசாவை சேர்ந்த அந்த மாணவி வனப்பகுதியில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதாக கூறப்படுகிறது. ஐந்து நாட்கள் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில், ஆறு குற்றவாளிகளும் துர்காப்பூர் துணை பிரிவு நீதிமன்றத்தில் காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர்.
நீதிபதியிடம் தாங்களாகவே ஜாமீன் கோரிய அவர்களின் மனுக்களை நீதிபதி நிராகரித்து, அவர்களை அக்டோபர் 31 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். மேலும், விரைவான விசாரணைக்காக, அடுத்த விசாரணைக்கு முன்னர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யுமாறு நீதிபதி காவல்துறைக்கு வலியுறுத்தினார்.