''பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்'' என கர்நாடக மாநில வாக்காளருக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கர்நாடகாவில் உள்ள 224 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் மே 10ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி தேர்தல் பிரச்சாரம் கடந்த சில வாரங்களாக பரபரப்பாக நடந்து வருகிறது. இத்தேர்தல் முடிவுகள் வரும் 13 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்ற முடிவுகள் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் ஆட்சியமைக்க வேண்டும் பாஜக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன. இக்கட்சிக்குப் போட்டியாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் பிரச்சாரடத்தில் ஈடுபட்டுள்ளன.
இன்று மாலையில் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய உள்ளது. இந்த நிலையில், நாளை மறுதினம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மேற்கு வங்க மா நில முதல்வர் மம்தா பானர்ஜி கர் நாடக மா நில வாக்காளர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், கர்நாடக மாநில சகோதர, சகோதரிகளே நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு மட்டும் வாக்களியுங்கள் என்பது நான் விடுக்கும் ஒரு வேண்டுகோள். பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என நான் உங்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்…பாஜக மிகவும் ஆபத்தானது என்று கூறியுள்ளார்.