மக்களவையில் நேற்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நீட் விவகாரம், அக்னிவீர் திட்டம், மணிப்பூர் விவகாரம், பாஜக, ஆர்எஸ்எஸ் என பல்வேறு விஷயங்கள் குறித்து ஆவேசமாக பேசினார். இதனால் ராகுல் காந்திக்கும், பாஜக மூத்த அமைச்சர்களுக்கும் இடையே காரசாரமாக விவாதம் நடைபெற்றது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்பி-க்கள் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நடந்துகொண்டது போல் நடந்து கொள்ள வேண்டாம் என எம்பி-க்களுக்கு அறிவுறுத்தினார்.
ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு, எந்தப் பிரதமரும் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெறாததால், சிலர் அமைதியை இழந்துள்ளனர் என எதிர்க்கட்சிகளை பிரதமர் மோடி விமர்சித்தார்.