பிரதமர் மோடி புதிய மைல்கல்: இந்திரா காந்தியை சாதனையை முறியடித்தார்..!

Mahendran

வெள்ளி, 25 ஜூலை 2025 (10:15 IST)
பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் இரண்டாவது மிக நீண்ட காலம் தொடர்ச்சியாக பதவியில் இருக்கும் பிரதமராக, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்துள்ளார். இதற்கு முன்னர், இந்திரா காந்தி 4,077 நாட்கள் தொடர்ச்சியாக பிரதமர் பதவியில் இருந்து வந்த நிலையில், இன்றுடன் நரேந்திர மோடி 4,078 நாட்கள் பிரதமர் பதவியின் பெருமையை அடைந்துள்ளார்.
 
2001 ஆம் ஆண்டு குஜராத் முதலமைச்சராக தனது அரசியல் பயணத்தை தொடங்கிய பிரதமர் மோடி, குஜராத் மற்றும் தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களுக்கு தொடர்ச்சியாக 24 ஆண்டுகள் தலைமை தாங்கியுள்ளார். எந்த ஒரு இந்திய அரசியல்வாதியும் இதுவரை எட்டாத ஒரு நிகரற்ற சாதனையாக இது பார்க்கப்படுகிறது.
 
இந்தியாவில் மிக நீண்ட காலம் பிரதமர் பதவியில் இருந்த காங்கிரஸ் அல்லாத பிரதமர் என்ற பெருமையையும் நரேந்திர மோடியே பெற்றுள்ளார். மேலும், மக்களவை தேர்தலில் சொந்தமாக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்த முதல் காங்கிரஸ் அல்லாத பிரதமர் இவரே என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சாதனைகள், இந்திய அரசியலில் நரேந்திர மோடியின் தனித்துவமான இடத்தையும், அவரது தலைமைக்கு கிடைத்த தொடர்ச்சியான மக்கள் ஆதரவையும் எடுத்துக்காட்டுகின்றன.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்