நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் அயோத்தி நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் மூலமாகவும், பாத யாத்திரையாகவும் பக்தர்கள் அயோத்திக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி பக்தர்கள் பலர் காயமடைந்த நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் உத்திரபிரதேச மாநில போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.