2 வாரங்களுக்கு முன் துணை முதல்வர், இன்று விவசாயி!

Webdunia
செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (12:16 IST)
2 வாரங்களுக்கு முன் துணை முதல்வர், இன்று விவசாயி!
ஆந்திராவில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் துணை முதல்வராக இருந்தவர் தற்போது விவசாயம் செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவை சமீபத்தில் மாற்றப் பட்டது என்பதும் துணை முதல்வராக இருந்த மூவரும் மாற்றப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
அந்த வகையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை துணை முதல்வராக இருந்த பாமுலா புஷ்பா ஸ்ரீவாணி என்பவர் தற்போது வீட்டில் இயற்கை விவசாயம் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இது குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் எம்எல்ஏவாக மட்டும் இருந்து வரும் நிலையில் அந்த பகுதியில் இருக்கும் குறைகளை கேட்பதில் தீவிரமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்