அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

Prasanth Karthick

வியாழன், 8 மே 2025 (16:56 IST)

பாகிஸ்தானின் லாகூரில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடக்கத் தொடங்கியுள்ள நிலையில் அங்குள்ள அமெரிக்க மக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் கிட்டத்தட்ட தொடங்கிவிட்ட நிலையில், ஆபரேஷன் சிந்தூர் மூலமாக பாகிஸ்தானின் பயங்கரவாதிகளின் நிலைகளை இந்திய ராணுவம் தாக்கியது. பதிலுக்கு பாகிஸ்தான் ராணுவம் எல்லைப்பகுதியில் உள்ள பூஞ்ச் கிராமத்தில் நடத்திய தாக்குதலில் 11 அப்பாவி மக்கள் பலியானார்கள்.

 

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக அடுத்த நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டுள்ளது. இன்று லாகூர், கராச்சி உள்ளிட்ட இடங்களில் ட்ரோன் தாக்குதல் நடந்ததாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவம் லாகூரில் அமைத்திருந்த வான்வழி தாக்குதல் தடுப்பு அமைப்பையே அடித்து சின்னாப்பின்னமாக்கியுள்ளது இந்திய ராணுவம்.

 

இதனால் இனி லாகூர் மீது விழும் ஏவுகணைகளை பாகிஸ்தானால் வானிலேயே சுட்டு வீழ்த்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் லாகூரில் வான்வழி தாக்குதலை இந்திய ராணுவம் தீவிரப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

 

இதனால் அமெரிக்க அரசு லாகூரில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறும்படி உத்தரவு பிறப்பித்துள்ளது. லாகூரை விட்டு வெளியேற முடியாதவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படியும், வெளியே வரவேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

ஆபரேஷன் சிந்தூர் தொடரும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருந்த நிலையில் லாகூரில் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்