பாகிஸ்தானுக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என்றும், லாகூரில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்துக்கு மாற வேண்டும் அல்லது நாடு திரும்ப வேண்டும் என்றும் அமெரிக்க தூதகம் வலியுறுத்திய நிலையில், பாகிஸ்தானுக்கும் ஜம்மு காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம் என்று சிங்கப்பூரும் தனது குடிமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக, சிங்கப்பூர் தனது நாட்டு மக்களுக்கு கூறிய அறிவுறுத்தலில், பாகிஸ்தானில் உள்ள எந்த நகரத்திற்கும் செல்ல வேண்டாம் என்றும், இந்தியாவில் உள்ள ஜம்மு காஷ்மீருக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
ஏற்கனவே பாகிஸ்தான் அல்லது ஜம்மு காஷ்மீரில் இருக்கும் சிங்கப்பூர் மக்கள் உடனடியாக வேறு பாதுகாப்பான இடத்துக்கு செல்லவும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக, சிங்கப்பூரை அடுத்து வேறு சில நாடுகளும் இதே போன்ற எச்சரிக்கையை வெளியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.