டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைந்துள்ள நிலையில், தலைமைச் செயலகத்தில் உள்ள ஆவணங்களை பாதுகாக்கும் வகையில் தலைமைச் செயலகம் சீல் வைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், உள்ள ஆவணங்களை பாதுகாக்கும் வகையில் டெல்லி தலைமை செயலகம் சீல் வைக்கப்பட்டதாகவும், துணைநிலை ஆளுநர் இது குறித்த உத்தரவு பிறப்பித்து உள்ளதாகவும், தலைமைச் செயலகம் பூட்டப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அருகில் யாரும் நுழைய முடியாத வகையில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தலைமைச் செயலகத்தில் உள்ள முக்கிய ஆவணங்கள், கணினி ஹார்டுவேர்கள் ஆகியவற்றை பாதுகாக்க, துணைநிலை ஆளுநர் உத்தரவு பிறப்பித்ததை அடுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.