டெல்லி தேர்தல் நிலவரம் குறித்து எனக்கு தெரியாது: கேரளாவில் பிரியங்கா காந்தி பேட்டி..!

Mahendran

சனி, 8 பிப்ரவரி 2025 (10:58 IST)
டெல்லியில் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் விறுவிறுப்பாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், கேரள மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் வந்த பிரியங்கா காந்தி, டெல்லி தேர்தல் நிலவரம் குறித்து தனக்கு தெரியாது என்று கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் கடந்த ஐந்தாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில், இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்று, ஆட்சியை கிட்டத்தட்ட பிடித்து விட்டது என்பதும், அந்த கட்சியின் 42 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆளும் கட்சியான ஆம் ஆத்மி ஆட்சியை இழந்தாலும்,  28 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், ஒரு காலத்தில் டெல்லியில் தொடர்ச்சியாக மூன்று முறை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, இந்த தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் வெறும் பூஜ்யத்தை மட்டுமே காங்கிரஸ் பெற்றுள்ள நிலையில், கேரள மாநிலம் கண்ணூர் வந்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பேரவை பிரியங்கா காந்தி, "டெல்லி தேர்தல் நிலவரம் பற்றி எனக்கு தெரியாது" என்று கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்