அபராதம் கேட்டால் தற்கொலை செய்துகொள்வேன்: போலீசாரை மிரட்டிய இளம்பெண்ணால் பரபரப்பு

Webdunia
ஞாயிறு, 29 செப்டம்பர் 2019 (18:47 IST)
சமீபத்தில் மத்திய அரசு அறிமுகம் செய்த புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கும், சரியான ஆவணங்கள் இல்லாதவர்களுக்கும் கடுமையான அபராதம் விதிக்கப்பட்டு வருவது தெரிந்ததே. சில சமயம் வாகனத்தின் மதிப்பை விட அபராத மதிப்பு தொகை அதிகம் இருப்பதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர் 
 
மேலும் நீதிமன்றம் பலமுறை கூறியும் ஹெல்மெட் போடாமல் இருந்த பல வாகன ஓட்டிகள் ரூபாய் 5000 மற்றும் 10 ஆயிரம் என அபராதம் விதிக்கப்பட்டுள்ளது தெரிந்ததும், தற்போது வாகனம் ஓட்டுபவர் மட்டுமின்றி பின்னால் உட்கார்ந்து இருப்பவர்களும் பொறுப்பாக ஹெல்மெட்டுகளை போட்டு அணிந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
 
இந்த நிலையில் டெல்லியில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு இளம்பெண்ணை போலீசார் மறித்து, அவரிடம் வாகனத்திற்கான ஆவணங்களை கேட்டனர். அந்த இளம்பெண்ணிடம் எந்த ஆவணங்களும் இல்லாததால் அவருக்கு ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதிக்க முடிவு செய்தனர் 
 
 
இதனை அடுத்து போலீசாரிடம் வாக்குவாதம் செய்த அந்த இளம்பெண் ஒரு கட்டத்தில் அபராதம் விதித்தால் தான் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டி, தனது கைப்பையில் இருந்த விஷ பாட்டிலை வெளியே எடுத்தால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின்னர் அந்த பெண்ணை சமாதானப்படுத்திய போலீசார் அவரிடம் அபராதம் ஏதும் வசூலிக்காமல் அனுப்பி வைத்ததாக தகவல்கள் வெளியாகிஉள்ளது 
 
 
போக்குவரத்து போலீசாரிடம் இருந்து தப்பிக்க இளம்பெண் செய்த தந்திரத்தை மற்றவர்களும் கடைப்பிடித்தால் என்ன ஆவது? என்று என்று சமூக வலைதள பயனாளிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்