டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சமீபத்தில் சோதனை செய்த நிலையில் தற்போது அவருடைய வங்கி லாக்கரில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
மதுக்கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சம்பந்தப்பட்டு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவருடைய வீட்டில் திடீரென சிபிஐ அதிகாரிகள் ஆய்வுச் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இது பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் ஆம் ஆத்மி ஆட்சியை கலைக்க எடுத்து வரும் நடவடிக்கைகளை ஒன்றும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட பலர் இந்த சோதனை குறித்து விமர்சனம் செய்தனர்
இந்த நிலையில் தற்போது அடுத்த கட்டமாக டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவின் வங்கி லாக்கரில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் இதில் முக்கிய ஆவணங்கள் கிடைத்து இருப்பதாக கூறப்படுகிறது