டெல்லியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் - அரவிந்த் கெஜ்ரிவால்

வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (20:23 IST)
டெல்லியில் ஆம் ஆத்மி  எம்.எல்.ஏக்களின் பலத்தை  நிரூபிக்கும் வகையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
 

டெல்லியில் சமீபத்தில், மதுபான விற்பனை உரிமத்தில் முறைகேடு நடந்த்தாகவும் அதன் மூலம் அரசுக்கு ரூ.6300 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் கூறி, துணைமுதல்வர் மணீஸ் சிசோடியா மீது சிபியை வழக்குப் பதிவு செய்துள்ளது.

 இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சி எம்.ஏக்களை பாஜக தங்கள் பக்கம் இழுத்து வருவதாக முதல்வர்  கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தார். அதில், பெட்ரோல் டீசல் உயர்வு ஆகியவை மூலம் கிடைக்கும் பணத்தினால் மற்ற கட்சிகளை பாஜக விலைக்கு வாங்குகிறது என்றும் பாஜக இதுவரை 6,300 கோடி செலவில் 275 எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி உள்ளது என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியிருந்தார்.

இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏக்கள் யாரும் விலகவில்லை என்று நிரூபணம் செய்வதற்காக வரும் நாட்களீல் டெல்லி சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்