சீனாவைத் தொடர்ந்து 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. சீனாவில் மட்டுமே 3000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் தென் கொரியா, ஈரான், உள்ளிட்ட நாடுகளில் உயிரிழப்புகள் அதிகமாகி வருகிறது.இந்நிலையில் டெல்லியில் உள்ள பள்ளிகளை மூட துணைமுதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே ஐரோப்பா நாடான இத்தாலி நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அந்நாட்டில் 3,089 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக இத்தாலியின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இத்தாலியில் உள்ள அனைத்து பள்ளிகளையும் வரும் 15 ஆம் தேதி வரை மூட அந்நாட்டுக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில்,டெல்லியில் கொரோனோ வைரஸ் பாதிப்பால் பள்ளிகளை உடனடியாக மூட அம்மாநில துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உத்தரவிடப்பட்டுள்ளார்.
அனைத்து தொடக்கப் பள்ளிகளையும் மார்ச் 31 ஆம் தேதிவரை மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது,