நிர்பயா வழக்கு: 4வது முறையாக தூக்கு தண்டனை தேதி அறிவிப்பு!

வியாழன், 5 மார்ச் 2020 (15:05 IST)
நான்காவது முறையாக நிர்பயா குற்றவாளிகளில் தூக்கு தண்டனை தேதியை டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 
ஏற்கனவே இரண்டு முறை நிர்பயா குற்றவாளிகளில் தண்டனை தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து மார்ச் 3 ஆம் தேதி 4 குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும் என உத்தரவு இடப்பட்டது.
 
நிர்பயா குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா, குற்றம் புரிந்தபோது தனக்கு 16 வயது என்பதால் சிறார் தண்டனை சட்டத்தின் வழக்கின் கீழ் தன்னை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து பவன் குமார் குப்தா சார்பில் ஜனாதிபதியிடம் கருணை மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் குற்றவாளியின் மனுவை ஜனாதிபதி நிராகரித்தார். 
 
இதனையடுத்து நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கான தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும்வரை தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தூக்கு தண்டனை என உத்தரவிட்ட பிறகு இது மூன்றாவது முறையாக நிறுத்தி வைக்கப்படுகிறது.
 
இந்நிலையில் தற்போது நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேரையும் மார்ச் 20 ஆம் தேதி காலை 5.30 மணிக்கு தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்