சீனாவைத் தொடர்ந்து 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. சீனாவில் மட்டுமே 3000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் தென் கொரியா, ஈரான், உள்ளிட்ட நாடுகளில் உயிரிழப்புகள் அதிகமாகி வருகிறது.
அதே போல், பீகார் மாநிலம் போத் கயா போன்ற ஆன்மீக ஸ்தலங்களுக்கு வருவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும் இந்தியாவில் முதலாவதாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலமான கேரளாவில் சுற்றுலா மூலம் கிடைக்கப்பெறும் வருவாய் குறைந்துள்ளது.