கடும் எதிர்ப்பையும் மீறி நிறைவேறியது டெல்லி நிர்வாக மசோதா.. அரவிந்த் கெஜ்ரிவால் அதிருப்தி..!

Webdunia
செவ்வாய், 8 ஆகஸ்ட் 2023 (07:29 IST)
மத்திய அரசு டெல்லி நிர்வாக மசோதாவை நிறைவேற்ற முடிவு செய்த நிலையில் இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. குறிப்பாக டெல்லியை ஆட்சி செய்யும் அரவிந்த் எஜுவால் எதிர்க்கட்சிகளிடம் தனது ஆதரவை கூறினார் என்பதும் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த மசோதாவை எதிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 
 
பெங்களூரில் நடந்த எதிர்கட்சிகளின் கூட்டத்தின் போது கூட இந்த மசோதாவை அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தால்தான் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வேன் என்று நிபந்தனையும் விதித்திருந்தார். 
 
இந்த நிலையில் டெல்லி நிர்வாக மசோதா ஏற்கனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் நேற்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. 
 
இந்த மசோதாவுக்கு ஆதரவாக 131 வாக்குகளும் எதிர்ப்பாக 102 வாக்குகளும் கிடைத்ததை எடுத்து டெல்லி நிர்வாக மசோதா நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக அதிமுக வாக்களித்து ள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்