விமானம் கிளம்பும் நேரத்தில் திடீரென வெடிகுண்டு மிரட்டல்.. அவசர அவசரமாக இறங்கிய பயணிகள்..!

Siva
செவ்வாய், 28 மே 2024 (07:51 IST)
டெல்லியில் இருந்து வாரணாசிக்கு கிளம்பும் விமானம் தயாராகிக் கொண்டிருந்த நிலையில் திடீரென வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் அவசர அவசரமாக இறக்கி விடப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

விமானங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு அவ்வப்போது வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன என்பதும் சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் இரண்டு இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக மிரட்டல் இமெயில் வந்தது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று டெல்லியில் இருந்து வாரணாசி செல்லும் இண்டிகோ விமானம் கிளம்புவதற்கு தயாராக இருந்த நிலையில் திடீரென வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் விமானம் கிளம்பவில்லை.

உடனடியாக விமானத்தில் இருந்த பயணிகள் அவசர கதவு வழியாக வெளியேற்றப்பட்டனர் என்றும் இதனை அடுத்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் விமானத்திற்குள் சோதனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

இதுவும் கிட்டத்தட்ட வெறும் மிரட்டலாக தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் டெல்லி விமான நிலையத்தில் இந்த மிரட்டல் காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்