கட்டுப்பாட்டை இழந்தது ஹெலிகாப்டர்.. கேதார்நாத் சென்ற பக்தர்களுக்கு என்ன ஆச்சு?

Siva

வெள்ளி, 24 மே 2024 (13:50 IST)
கேதார்நாத் சென்ற ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்த நிலையில் அதில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளன
 
தற்போது கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் செல்லும் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதாரநாத் செல்ல ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிலையில் சுற்றுலா பயணிகளை ஏற்று செல்லும் ஹெலிகாப்டர் ஒன்று திடீரென தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்ததாக தெரிகிறது
 
ஹெலிப்பேடில் தரையிறங்கும் தருணத்தில் ஹெலிகாப்டர் சுழன்றபடி தத்தளித்த நிலையில் அதன் பிறகு தரைப்பகுதியில் ஹெலிகாப்டர் பைலட் கஷ்டப்பட்டு தரையிறக்கினார். இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த ஆறு சுற்றுலா பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக தெரிகிறது
 
தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் தனது கட்டுப்பாட்டை இழந்ததாக முதல் கட்ட தகவல் விசாரணையில் தெரிய  வந்துள்ள நிலையில் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
 
Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்