மணிப்பூரில் ஈஸ்டர் ஞாயிறு அன்று அரசு வேலை நாளாக அறிவிப்பு

Sinoj
வியாழன், 28 மார்ச் 2024 (15:55 IST)
மணிப்பூரில் வரும் 31 ஆம் தேதி ஈஸ்டர் ஞாயிறு அன்று அரசு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடும் ஈஸ்டர் வரும் ஞாயிற்றுக் கிழமை 31 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
 
இந்த நிலையில் மணிப்பூரில்  இந்தியாவில் அதிகளவில் கிறிஸ்தவர்கள் வாழும் மாநிலமாக  உள்ளது.
 
இங்கு பாஜக ஆட்சி  நடைபெற்று வரும் நிலையில், வரும் ஈஸ்டர் தினமான ஞாயிற்றுக் கிழமை  அதற்கு முந்தைய நாள் சனிக்கிழமை அதாவது 30 ,31 ஆகிய இரு நாட்கள் அரசு வேலை நாள் என மாநில அரசு அறிவித்துள்ளது.
 
இந்த அறிவிப்பு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
 
இது கிறிஸ்தவர்களின் உணர்வுகளை காயப்படுத்துவதாக மாநிலத்தின் பழங்குடியின அமைப்பு தெரிவித்துள்ளது. அம்மாநில மக்கள் தொகையில் 41 சதவீதம் பேர் கிறிஸ்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்