கொரோனா பாதித்த மாமனார்… முதுகில் சுமந்து சென்ற மருமகள் – அசாமில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Webdunia
வெள்ளி, 4 ஜூன் 2021 (09:10 IST)
அசாமில் கொரோனா பாதிப்புக்குள்ளான மாமனாரை மருமகள் ஒருவர் முதுகில் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலம் ராஹாவில் உள்ள பாட்டிகவானில் வசித்து வரும் துலேஷ்வர் தாஸுக்கு வயது 75.  இவருக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரின் மகன் ஊரில் இல்லாததால் அவரை மருத்துவமனையில் சேர்ப்பது சிக்கலாகியுள்ளது. இந்நிலையில் அவரின் மருமகளான் நிகாரிகா மட்டுமே இருந்ததால் அவரை முதுகில் சுமந்தபடியே அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதையடுத்து அங்கிருந்த மருத்துவர்கள் துலேஷ்வரை கொரோனா சிறப்பு வார்டுக்கு அனுப்பியுள்ளனர்.
மேலும் அவரை தூக்கி வந்த நிகாரிகாவுக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ள உத்தரவிட்டு மருத்துவமனையில் அனுமதித்துளனர். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்