வாலி மற்றும் குஷி ஆகிய படங்களின் மூலம் தன்னை ஒரு சிறந்த இயக்குனராக தன்னை சினிமா ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டவர் எஸ் ஜே சூர்யா. அதன் பின்னர் நடிக்கும் ஆசையில் இயக்கத்துக்கு கொஞ்சகாலம் இடைவெளி எடுத்துக் கொண்டார். பின்னர் இசை படத்தை இயக்கி நடித்தார். ஆனால் அந்த படம் பெரிதாக வரவேற்பைப் பெறாததால் மீண்டும் நடிப்புப் பாதைக்கே திரும்பினார்.
இப்போது பிஸியான நடிகராக இருக்கும் அவர் பல படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அவர் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் பரவின. ஆனால் அதை எஸ் ஜே சூர்யா தரப்பு மறுத்துள்ளது. இப்போதைக்கு முழுக்க முழுக்க நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளதாக சொல்லப்படுகிறது.