நடிகர் மாரிமுத்துவின் கடைசி பேட்டி.. தேசிய விருது குறித்த பரபரப்பு கருத்து..!

வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (11:16 IST)
நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் இன்று காலை காலமான நிலையில் அவரது மறைவிற்கு திரையுலகினர் மற்றும் திண்ணையில் சின்னத்திரை உலகினர் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அவர் முன்னணி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின் வீடியோ வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் தேசிய விருது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். 
 
கடைசி விவசாயி படத்துக்கு தேசிய விருது கிடைத்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் ஆனால் அதே நேரத்தில் ஜெய்பீம் படத்திற்கு கிடைக்காதது எனக்கு மிகுந்த வருத்தம் என்றும் கூறியுள்ளார். 
 
தேசிய விருது அளிக்கும் விருது குழுவினர் ஜெய்பீம் படத்திற்கு விருது கொடுக்காததற்கு ஏதாவது காரணத்தை கண்டுபிடித்திருப்பார்கள் என்றும் ஆனாலும் அந்த படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய விருதை பெற்றுள்ளது என்றும் அவர் கூறினார்  
 
தேசிய விருது என்பது ஒரு அங்கீகாரம் தான் என்றும் மக்கள் மத்தியில் ஒரு திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் முக்கியம் என்றும் அவர் கூறினார். இந்த பேட்டி தான் அவர் கொடுத்த கடைசி பேட்டி என்பதால் இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்