மீண்டும் உயர்ந்தது சிலிண்டர் விலை - இல்லத்தரசிகள் வேதனை!

Webdunia
திங்கள், 15 பிப்ரவரி 2021 (08:34 IST)
சென்னையில் சிலிண்டர் விலை மேலும் ரூ.50 உயர்ந்து, ரூ.785க்கு விற்பனை ஆகிறது.

 
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது கேஸ் சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளது. டிசம்பர் மாத இறுதியில் ஒரே மாதத்தில் இரண்டு முறை கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது.
 
இந்நிலையில் ரூ.710க்கு விற்பனையாகி வந்த கேஸ் சிலிண்டர் கடந்த மாதம் மேலும் ரூ.25 உயர்ந்து ரூ.735 ஆக விற்பனை ஆனது. இதனிடையே தற்போது சென்னையில் சிலிண்டர் விலை மேலும் ரூ.50 உயர்ந்து, ரூ.785க்கு விற்பனை ஆகிறது. 
 
ஒரே மாதத்தில் சிலிண்டர் விலை ரூ.75 உயர்த்தியுள்ளன எண்ணெய் நிறுவனங்கள். தொடர்ந்து சிலிண்டர் அதிகரித்து வருவது இல்லத்தரசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்