கடந்த ஒரு ஆண்டு காலத்தில் நாடு முழுவதும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் 400% அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.
தேசிய குற்ற ஆவணம் சமீபத்தில் வெளியிட்டுள்ள தகவலில் கடந்த 2019ம் ஆண்டில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட குழந்தைகளுக்கு எதிரான சைபர் க்ரைம் வழங்குகளோடு ஒப்பிடுகையில் 2020ம் ஆண்டில் வழக்குகள் 400 சதவீதமாக அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளது.
அதிகமான குற்றங்கள் பதிவான மாநிலங்களில் 170 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உத்தர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
மொத்தம் பதிவு செய்யப்பட்ட 842 வழக்குகளில் 738 வழக்குகள் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான காட்சிகளை காண்பிப்பது, பாலியல் ரீதியாக புகைப்படங்களை சித்தரித்து வெளியிடுவது மற்றும் அது தொடர்பான தகவல்களை பகிர்வது உள்ளிட்ட காரணங்களுக்காக தொடரப்பட்டுள்ளது.