கடந்த 1991ஆம் ஆண்டு வளைகுடாப் போர் நடைபெற்ற போது மிகக் கடுமையாக கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்தது. அதன் பின்னர் 29 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் கச்சா எண்ணெய் மிக அதிக அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் காரணமாக பெரும்பாலான போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பெட்ரோல், டீசலின் தேவை குறைந்துள்ளதால் கச்சா எண்ணெயின் விலை தற்போது மிக அதிகமாக வீழ்ச்சி அடைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்தியாவை பொறுத்தவரை இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளதால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீச்சி அடைந்தாலும் பெட்ரோல் டீசல் விலை பெருமளவு குறையல்லை இருப்பினும் ஓரளவு குறைந்துள்ளது பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுக்க முழுக்க கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்று என்பதால் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் செலவு குறைந்துள்ளது. இருப்பினும் டாலருக்கு நிகரான ரூபாயின் வீழ்ச்சியின் காரணமாக முழுமையான பலனை இந்தியர்கள் அனுபவிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
கொரோனாபோன்ற காரணங்களால் கச்சா எண்ணையின் விலை கடுமையாக சரிந்து உள்ளதாகவும் இதனை அடுத்து அரபு நாடுகளில் உள்ள கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்கள் உற்பத்தியை குறைத்து உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இன்னும் ஒரு சில மாதங்களுக்கு கச்சா எண்ணெயின் விலை உயர வாய்ப்பில்லை என வர்த்தகர்கள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன