மிட்நைட்டில் பாத்ரூம் கதவை திறந்தவனுக்கு காத்திருந்த ஷாக்: வைரல் வீடியோ!!

Webdunia
வியாழன், 7 நவம்பர் 2019 (14:55 IST)
குஜராத்தில் குளியலறையில் வாய் திறந்தபடி படுத்திருந்த முதலையை வனத்துறையினர் பிடித்து சென்றது வீடியோவாக வைரலாகி வருகிறது. 
 
குஜராத் மாநிலம் வதோதரா பகுதியில் வசித்து வருபவர் மஹேந்திரா பதியார். இவர் சம்பவ தினத்தன்று வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது விநோத சத்தம் ஒன்று கேட்டுள்ளது. சந்தம் எங்கிருந்து வருகிறது என தேடி குளியலறையில் வருவதை கண்டுபிடித்துள்ளார். 
 
பின்னர் பாத்ரூம் கதவை திறந்து பார்த்த போது முதலை ஒன்று வாயை திறந்தபடி படுத்துகிடந்துள்ளது. இதனால் ஷாக்கான மஹேந்திரா உடனே குளியலறையின் கதவை மூடிவிட்டு வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். 
 
சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், சுமார் 1 மணிநேர போரட்டத்துக்குபின் முதலையை பிடித்துள்ளனர். தற்போது இது வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்