உலகம் முழுவதும் பல துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கான உச்ச அங்கீகாரமான நோபல் பரிசு தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இயற்பியல், வேதியியல், இலக்கியம் என பலதுறைகளுக்கு நோபல் பரிசு வழங்கப்படுள்ள நிலையில் இன்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை அமெரிக்க பொருளாதார நிபுணரான அபிஜித் பானர்ஜி மற்றும் அவரது மனைவி எஸ்தர் டூஃப்லா ஆகியோர் பெற்றுள்ளனர். இவர்களோடு மைக்கெல் க்ரீமர் என்பவரும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை பகிர்ந்து கொண்டுள்ளார். வருமையை ஒழிப்பதற்கான முன்னொடி திட்டங்களை வகுத்ததற்காக இந்த மூவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
அபிஜித் பானர்ஜி கல்கத்தாவில் பிறந்து ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். அவரது மனைவி எஸ்தர் டூஃப்லா அமெரிக்க பல்கலைகழகம் ஒன்றில் பொருளாதார பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்தியாவை சேர்ந்த அபிஜித் பானர்ஜி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றதை இந்தியா முழுவதும் கொண்டாடி வரும் வேளையில் அபிஜித் பற்றி கூறியுள்ள குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மெவானி “பக்தாள்கள் அபிஜித் பானர்ஜியை நோபல் பரிசு பெற்றதற்காக கொண்டாடி வருகிறார்கள். அவர் ஜவஹர்லால் பல்கலைகழகத்தின் பெருமைமிகு மாணவர் என்பதையும், பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி மற்றும் வெறுப்பு குற்றங்கள் ஆகியவற்றை கடுமையாக விமர்சித்தவர் என்பதையும் மறந்துவிட வேண்டாம்” என கூறியுள்ளார்.