இந்திய ராணுவத்திற்கு நன்கொடை கேட்டு மோசடி குறுஞ்செய்தி! போலிகளை நம்ப வேண்டாம்! - இந்திய ராணுவம் எச்சரிக்கை!

Prasanth Karthick

திங்கள், 28 ஏப்ரல் 2025 (12:16 IST)

இந்திய ராணுவத்திற்கு நன்கொடை அளிக்க கோரி மோசடி மெசேஜ்கள் பரவி வருவதாக இந்திய ராணுவம் எச்சரித்துள்ளது.

 

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் போர் ஏற்படலாம் என்ற சூழல் உள்ளது. எனினும் உலக நாடுகள் தலையிட்டு இந்த விவகாரத்தில் சமரசம் செய்யும் முயற்சிகளும் நடந்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில் இந்திய ராணுவத்தின் முப்படைகளும் தயார் நிலையில் இருந்து வருகின்றன. 

 

இந்நிலையில் போரில் ஈடுபட உள்ள இந்திய ராணுவத்திற்கு நன்கொடை உதவி வழங்குமாறு மோசடி லிங்க் உடன் கூடிய வாட்ஸப் மெசேஜ் மற்றும் மொபைல் குறுஞ்செய்திகள் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து எச்சரித்துள்ள இந்திய ராணுவம், இதுபோன்ற நன்கொடை எதையும் பெறவில்லை என்றும் மோசடி குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்