பந்த் வெற்றியை கொண்டாட நினைத்து பல்பு வாங்கிய கன்னட அமைப்பினர்

வியாழன், 25 ஜனவரி 2018 (15:35 IST)
கர்நாடக மாநிலத்தில் பந்த் வெற்றியை காண்பிக்க சாலையில் கிரிக்கெட் விளையாடிய போது பீல்டிங் செய்தவர் மண்டையில் பேட் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
மகதாயி நதிநீர் பிரச்சனையை முன்வைத்து கர்நாடகா மாநிலம் முழுக்க இன்று பந்த் நடைபெற்று வருகிறது. பல்வேறு கன்னட அமைப்பு இந்த பந்த்-ஐ நடத்தி வருகின்றனர். தாவண்கெரே நகரில் உள்ள ஜெயதேவா சர்க்கிள் பகுதியில் கன்னட் அமைப்பினர் பந்த் வெற்றி பெற்றுள்ளது என்பதை காண்பிக்க நூதனமான செயலில் ஈடுபட்டுள்ளனர்.
 
கிரிக்கெட் ஆடி அதை புகைப்படம் எடுத்து வெளியிட நினைத்துள்ளனர். ஆனால் நடந்தது வேறு. தாணவகெரே மாவட்ட கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவரான சிவகுமார் பேட் செய்தார். ஆனால் பேட் கையை விட்டு விலகி பறந்து சென்று பீல்டிங் செய்த ஒருவர் மண்டை மீது விழுந்தது. அவருக்கு மண்டை உடைந்து ரத்தம் வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்