பார்வையற்றவர்களுக்கான 5 வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 8 ஆம் தேதி துவங்கியது. இதில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், நேபாளம், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் பங்கேற்றன.
இறுதிப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் மோதின. இந்த போட்டி ஷார்ஜாவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் சேர்த்தது.
309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 8 பந்துகள் மீதம் இருக்கையில், 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தொடர்ந்து 2 வது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன், கடந்த 2014 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக விளையாடி கோப்பையை வென்றது.