அரசியலுக்காக முத்தலாக் மசோதாவை காங்கிரஸ் முடக்கியது; மத்திய சட்ட மந்திரி

புதன், 19 செப்டம்பர் 2018 (16:22 IST)
காங்கிரஸ் ஓட்டுவங்கி அரசியலுக்காக பாரளுமன்ற மாநிலங்களவையில் முத்தலாக் மசோதாவை முடக்கியதாக மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.

 
முத்தலாக் முறையை தண்டனைக்குரிய குற்றமாக கருதும் அவசர சட்டத்திற்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அறிவிப்பை வெளியிட்ட மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர பிரசாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
முத்தலாக் முறையை உலகில் உள்ள 22 நாடுகள் ஒழுங்குப்படுத்தி திருத்தியுள்ளன. ஆனால், இந்தியாவில் உள்ளவர்கள் ஓட்டுவங்கி அரசியலுக்காக கடைப்பிடிக்க மறுக்கின்றனர். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது முத்தலாக் ஒழிப்புக்கு ஒத்துழைக்க மறுத்து விட்டார்.
 
முத்தலாக் மூலம் விவாகரத்து செய்யும் முறை தொடர்ந்து பெருகி வருவதால் இதை தடுப்பதற்காக அவசர சட்டம் இயற்ற வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்