80 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு; 34 பேருக்கு ஒமிக்ரான்! – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

ஞாயிறு, 26 டிசம்பர் 2021 (09:10 IST)
தமிழகத்தில் 16வது கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறும் நிலையில் தடுப்பூசி இருப்பு குறித்து அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மெகா கொரோனா தடுப்பூசி முகாம் கடந்த செப்டம்பர் முதலாக தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. இன்று 16வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.

இந்நிலையில் தடுப்பூசி முகாம் குறித்து பேசியுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் “தமிழ்நாடு முழுவதும் இன்று 16வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. 80 லட்சம் தடுப்பூசிகள் மாநில அரசின் கையிருப்பில் உள்ளது. சென்னையில் மட்டும் 1600 தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. சென்னையில் இன்று 2.5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது” என தெரிவித்துள்ளார்.

மேலும் ஒமிக்ரான் குறித்து பேசிய அவர் “தமிழ்நாட்டில் இதுவரை ஒமிக்ரான் தொற்றால் 34 பேர் பாதிப்பு. 22 பேர் மட்டுமே மருத்துவமனையில் உள்ளனர். 12 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்