இந்தியாவில் தடுப்பூசியால் ஒமிக்ரான் குறையும்! – தென் ஆப்பிரிக்கா நிபுணர் தகவல்!

ஞாயிறு, 26 டிசம்பர் 2021 (10:48 IST)
உலகம் முழுவதும் அதிகரித்துள்ள ஒமிக்ரான் பாதிப்பு இந்தியாவில் தடுப்பூசியால் கட்டுக்குள் வரும் என கூறப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவின் வெவ்வேறு வேரியண்ட் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்த நிலையில் சமீப காலத்தில் பாதிப்புகள் மெல்ல குறைந்தன. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவியுள்ள ஒமிக்ரான் வேரியண்ட் உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் ஒமிக்ரான் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் ஒமிக்ரானை கட்டுப்படுத்துவது குறித்து தென் ஆப்பிரிக்காவில் முதல் ஒமிக்ரானை கண்டறிந்த நிபுணர் பேசியுள்ளார்.

அதில் அவர் “இந்தியாவில் ஒமிக்ரான் பரவல் வேகமாக அதிகரிக்கும். ஆனால் நோயின் தாக்கம் குறைவாகவே இருக்கும். ஒமிக்ரான் இந்தியாவில் தடுப்பூசியால் கட்டுப்படுத்தப்படும். ஆனால் மக்கள் தடுப்பூசியை மட்டுமே நம்பி இல்லாமல் மாஸ்க் அணிவது போன்ற வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்