சிலிண்டர் டெலிவரிக்கு டிப்ஸ் எனும் கொள்ளை – நீதிமன்றம் கேள்வி !

Webdunia
புதன், 16 அக்டோபர் 2019 (08:48 IST)
சிலிண்டர் விநியோகத்தின் போது டிப்ஸ் என்ற பெயரில் வசூலிக்கப்படுவதைத் தடுக்க எண்ணெய் நிறுவனங்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளன என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்தியாவில் சமையல் எரிவாயு விநியோகம் கேஸ் சிலிண்டர்களில் அடைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அப்போது வீடுகளில் டெலிவரி செய்யப்படும் போது டெலிவரிக்கான டிப்ஸாக ஒரு தொகை வசூல் செய்யப்படுகிறது.

இதைத் தடுக்க வேண்டும் என  சென்னை அன்னனூரைச் சேர்ந்த மருத்துவர் லோகரங்கன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். ’நாட்டில் உள்ள 23 கோடி இணைப்புகளின் மூலம் இதுபோல பல கோடி ரூபாய் தொகை கொள்ளையடிக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான புகார்கள் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டும் எண்ணெய் நிறுவனங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என தன் மனுவில் கூறியிருந்தார்.

இது குறித்த விசாரணையின் போது நீதிமன்றம் ‘கூடுதல் பணம் வசூலிப்பது குறித்து 2,124 புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.’ என எண்ணெய் நிறுவனங்களிடம் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த எண்ணெய் நிறுவனங்கள் ‘ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன எனக் கூறின.  அதற்குப் பதிலளித்த நீதிமன்றம் ’அப்படியானால் அதை ஏன் இணையதளத்தில் வெளியிடவில்லை.’ எனக் கேள்வி எழுப்பின. மேலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நவம்பர் 1 ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டுமெனக் கூறியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்