க்ரிப்டோ கரன்சியை பயன்படுத்த அனுமதி – ஆர்பிஐ உத்தரவு ரத்து!

Webdunia
வியாழன், 5 மார்ச் 2020 (13:31 IST)
பிட்காயின் எனப்படும் க்ரிப்டோகரன்சிகளை இந்தியாவில் பயன்படுத்துவதற்கு ஆர்பிஐ விதித்த தடையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

டிஜிட்டல் கரன்சி அல்லது க்ரிப்டோ கரன்சி என்பது ஆன்லைன் மூலமாக பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படும் தனி பணமதிப்பு ஆகும். இது எந்த நாட்டின் பணமதிப்புடனும் தொடர்பு இல்லாதது மற்றும் அரசின் கட்டுப்பாட்டின் இல்லாததும் ஆகும்.

இந்த டிஜிட்டல் கரன்சி இந்தியாவிலும் பல நிறுவனங்களால் புழக்கத்தில் இருந்த நிலையில் இதனால் ரூபாய் வீழ்ச்சி மற்றும் பொருளாதார ஆபத்துகளை சந்திக்க வேண்டி வரலாம் என ரிசர்வ் வங்கி இந்த க்ரிப்டோகரன்சிக்கு இந்தியாவில் தடை விதித்தது.

இதை எதிர்த்து ஐ.எம்.ஏ.ஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் க்ரிப்டோகரன்சி என்பது டிஜிட்டல் பணம் இல்லை அது ஒரு பொருள் எனவும், அதை தடை செய்ய ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் இல்லை என்று தனது வாதத்தை முன்வைத்துள்ளனர்.

விசாரணை முடிவில் கிரிப்டோகரன்சிக்கு ரிசர்வ் வங்கி விதித்த தடையை நீக்கி அதை பயன்படுத்தலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால் இதனால் இந்திய பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்