கருவை கலைப்பது பற்றி தாய் எடுக்கும் முடிவே இறுதியானது: நீதிமன்றம் கருத்து

Webdunia
செவ்வாய், 6 டிசம்பர் 2022 (12:06 IST)
தாய் ஒருவர் தன்னுடைய வயிற்றில் இருக்கும் கருவை வளர்க்கலாமா? அல்லது கலைக்கலாமா? என்பதை அவரே முடிவு செய்யலாம் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
டெல்லியில் 26 வயதாகும் பெண் ஒருவர் தனது 33 வார கருவை கலைக்க நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். கருவை கலைக்க மருத்துவமனை மறுத்ததாகவும் அதனால் தனது மனுவை ஏற்று கருவை கலைக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கூறியிருந்தார்
 
இந்த நிலையில் மனு அளித்த 26 வயது பெண்ணின் 33 வார கருவை கலைக்க அவருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து மருத்துவமனையில் அவர் கருவை கலைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த தீர்ப்பில் நீதிபதி கூறிய போது கருவை கலைப்பது பற்றி தாய் எடுக்கும் முடிவே இறுதியானது என்று கூறியுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்